உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நீங்கள் எங்கே வீசினாலும் விட மாட்டோம்

நீங்கள் எங்கே வீசினாலும் விட மாட்டோம்

கோவை: ஐ.பி.ஏ.ஏ., மண்டல அளவிலான எறிபந்து மற்றும் டென்னிகாய்ட் ஆகிய இரு போட்டிகளிலும், கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி அணி முதலிடம் பிடித்தது.கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரியில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இன்டர் பாலிடெக்னிக் அதலெட்டிக் அசோசியேசன்(ஐ.பி.ஏ.ஏ.,) சார்பில், மண்டல அளவிலான எறிபந்து மற்றும் டென்னிகாய்ட் போட்டிகள், கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்தன.கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன் போட்டிகளை துவக்கி வைத்தார். எறிபந்து போட்டியில் எட்டு அணிகளும், டென்னிகாய்ட் போட்டியில் ஒன்பது அணிகளும் கலந்து கொண்டன.பல்வேறு சுற்றுகளை அடுத்து, டென்னிகாய்ட் அரையிறுதி போட்டியில், அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி அணி, 21:3, 21:1 என்ற புள்ளி கணக்கில், எஸ்.கே.பி.டி.சி., அணியை வென்றது.இரண்டாவது அரையிறுதியில், பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரி அணி, 21:16, 21:16 என்ற புள்ளி கணக்கில், பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் அணியை வென்றது.இறுதிப்போட்டியில், கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி அணி, 21:11, 21:8 என்ற புள்ளி கணக்கில் பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் அணியை வென்று, முதலிடத்தை தட்டியது.எறிபந்து அரையிறுதி போட்டியில், அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி அணி, 15:3, 15:2 என்ற புள்ளி கணக்கில் பி.ஏ., பாலிடெக்னிக் கல்லுாரி அணியையும், இரண்டாவது ஆட்டத்தில், நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரி அணி, 15:3, 9:15 மற்றும், 15:8 என்ற புள்ளி கணக்கில், பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரி அணியையும் வென்றது.இறுதிப்போட்டியில், கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி அணி, 15:8, 15:12 என்ற புள்ளி கணக்கில், பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரியை வென்று முதலிடம் பிடித்தது.உடற்கல்வி இயக்குனர் பாரதிராஜ் உள்ளிட்டோர், துவக்க விழாவில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ