உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விவாகரத்துக்கு 6 மாதம் காத்திருக்க தேவையில்லை!

விவாகரத்துக்கு 6 மாதம் காத்திருக்க தேவையில்லை!

விவாகரத்து சட்டமானது, கணவன்-- மனைவி இடையே சமரசம் மற்றும் இணைந்து வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கு கொண்டு வரப்பட்டது. இருப்பினும், எந்த சூழ்நிலையிலும் தம்பதியினர் சேர்ந்து வாழ விரும்பாத பட்சத்தில் விவாகரத்து வழங்கப்படுகிறது. விவாகரத்து செயல்முறையை எளிதாக்க அடிக்கடி திருத்தம் செய்யப்படுகின்றன. விவாகரத்து தொடர் பாக, கடந்தாண்டு சுப்ரீம் கோர்ட்டில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு அளித்துள்ள தீர்ப்பு: திருமண உறவு மேம்பட வழியில்லாத, மீண்டும் சேர்ந்து வாழவே முடியாது என்ற நிலையில் உள்ள தம்பதியினருக்கு பரஸ்பர சம்மதத்தின் அடிப்படையில், 142வது சட்டப் பிரிவின் கீழ் சுப்ரீம் கோர்ட்டிற்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விவகாரத்து வழங்க முடியும்.இந்த தம்பதியினர், குடும்ப நல நீதிமன்றங்களுக்கு சென்று நீண்ட விசாரணை, கட்டாய காத்திருப்பு போன்ற நடைமுறைகளை பின்பற்ற வேண்டியது இருக்காது. தம்பதியினரில் ஒருவர் மட்டும் விவாகரத்துக்கு சம்மதித்து, மற்றொருவர் எதிர்ப்பு தெரிவித்தால், சுப்ரீம் கோர்ட் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்த முடியுமா என்ற கேள்வி குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.இதன்படி, தம்பதியின் திருமண வாழ்க்கை முழுமையாக தோல்வி அடைந்து விட்டது; அவர்களால் மீண்டும் சேர்ந்து வாழவே முடியாது என்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டு, அதில் நீதிமன்றம் திருப்தி அடைந்தால், அப்போது, சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விவாகரத்து வழங்க முடியும்.அதேநேரத்தில், 142வது சட்டப்பிரிவின் கீழ் அடிப்படை உரிமைகள் குறித்து பரிசீலிக்கப்பட வேண்டும். கட்டாய காத்திருப்பு என்பது நிபந்தனைகள் மற்றும் தேவைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.தம்பதி மீண்டும் இணைவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றால், புதிய மறுவாழ்வுக்கான வாய்ப்புகள் இருந்தால், இரு தரப்பினர் ஒரு சிறந்த தேர்வை பெறுவதற்கு நீதிமன்றம் சக்தியற்றதாக இருக்கக் கூடாது என்று நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். இத்தீர்ப்பின் வாயிலாக, கணவன்-- மனைவி இருவரும் விவாகரத்தை விரைவு படுத்த, கீழ் நீதிமன்றங்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. விவாகரத்துக்கு ஆறு மாதம் காத்திருப்பு தேவையில்லை என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Mani Vellachamy
நவ 26, 2024 05:57

ஆமாம், கள்ளக் காதல் செட்டானவுடன் பிரிந்து விடலாம்.


m.arunachalam
நவ 26, 2024 01:48

அன்பு வேண்டாம், அங்கீகாரம் போதும் என்று நினைத்து வாழ்கிறாரகள் . அடிப்படையே தெரியவில்லை . பரிதாபமான மற்றும் முட்டாள்தனமான முடிவு. திணிக்கப்படும் எதிர்பார்ப்புகள் எதிர்பார்ப்புகளின் விளைவு .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை