உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒரு வாக்காளரும் விடுபட்டு விடக்கூடாது

ஒரு வாக்காளரும் விடுபட்டு விடக்கூடாது

சூலுார்: ''எந்த ஒரு வாக்காளரும் விடுபட்டு விடக்கூடாது. அனைவருக்கும் படிவங்களை விரைந்து வழங்க வேண்டும்,''என,தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவுறுத்தினார். சூலூர் சட்டசபை தொகுதி தீவிர திருத்தப் பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் கூடுதல் மேற்பார்வை அலுவலர்கள் பங்கேற்ற கூட்டம், சூலுார் தாலுகா அலுவலகம், கருமத்தம்பட்டி நகராட்சி அலுவலகம், சுல்தான்பேட்டை ஒன்றிய அலுவலகம் ஆகிய இடங்களில் நேற்று நடந்தது. மேற்பார்வையாளர்களின் பணிகள் குறித்து, சூலுார் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெகநாதன் பேசியதாவது: சூலுார் தொகுதியில், 333 ஓட்டு சாவடிகள் உள்ளன. ஐந்து ஓட்டு சாவடிகளுக்கு, ஒரு மேற்பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் ஓட்டு சாவடி நிலை அலுவலர்களிடம் படிவங்களை வழங்கி, அவை வாக்காளர்களிடம் முறையாக வழங்கப்படுகிறதா என, கண்காணிக்க வேண்டும். தினமும் எவ்வளவு படிவங்கள் கொடுக்கப்பட்டன என, கணக்கு வைத்திருக்க வேண்டும். எந்த ஒரு பூத்திலும் ஒரு வாக்காளர் கூட விடுபட்டு விடாமல் படிவங்களை வழங்கி , பூர்த்தி செய்யப்பட்ட பின் திரும்ப பெறுவதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு தொகுதியில் மேற்பார்வையாளர்கள் எண்ணிக்கை இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. அதனால், முதல்கட்ட பணியான படிவங்கள் வழங்கும் பணி துரிதமாக நடக்க அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ