மேலும் செய்திகள்
பாரதிதாசன் கல்லுாரியில் கண்தான விழிப்புணர்வு
13-Sep-2024
கோவை : ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்துார், ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்துார் சென்ட்ரல் சார்பில், கிக்கானி பள்ளியில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.'அன்பிற் சிறந்த தவமில்லை' என்ற தலைப்பில், காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் பேசியதாவது:'இந்த உலகம் முழுவதையும், என் அன்பு பசிக்கு உணவாக்கிக் கொள்ள விரும்புகிறேன்' என்றார் காந்தி. அன்பு இருக்கும் இடத்தில் வேற்றுமை, பகைமை, பிணக்கு, பூசல் எதுவும் இருக்காது. அதுதான் அன்பின் மகிமை.அன்போடு நீங்கள் இருக்கிறீர்கள் என்றால், உங்களுக்குள் ஏராளமான நல்ல பண்புகள் இருக்கும்.பாரதியின் பாடல்களில் எந்த பக்கம் பார்த்தாலும், அன்பை தான் பார்க்கலாம். அன்பென்று கொட்டும் முரசே என்று சொல்கிறார் பாரதி. வையகத்தில் அன்பிற் சிறந்த தவமில்லை. அன்புடையவர் மட்டும் தான் இன்புற்று வாழ முடியும்.அன்பு ஒன்று தான், வழக்கறிஞராக சென்ற மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை, மகாத்மா காந்தியாக, இந்த மண்ணுக்கு கொண்டு வந்து சேர்த்தது. அன்பில் பிறந்தது தானே அஹிம்சை.இவ்வாறு, அவர் பேசினார்.சங்கரா கண் மருத்துவமனை நிர்வாக அறங்காவலர் ரமணி பேசினார். ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்துார் தலைவர் ராம்குமார், செயலாளர் சவுண்டப்பன், ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்துார் சென்ட்ரல் தலைவர் பரத்ஷா, செயலாளர் அஸ்வின் உட்பட பலர் பங்கேற்றனர்.
13-Sep-2024