உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காளிங்கராயன் குளத்துக்கு 2 சதவீதம் நீர் கூட வரவில்லை

காளிங்கராயன் குளத்துக்கு 2 சதவீதம் நீர் கூட வரவில்லை

கோவில்பாளையம் ; 'அத்திக்கடவு திட்டத்தில் காளிங்கராயன் குளத்துக்கு இரண்டு சதவீதம் நீர் கூட வரவில்லை' என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்திக்கடவு கவுசிகா நதி மேம்பாட்டு சங்கத் தலைவர் செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் பல நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரவில்லை. ஒரு சில இடங்களில் தண்ணீர் நிரம்பி வழிந்து ஓடினாலும், சில இடங்களில் நிர்ணயிக்கப்பட்ட தண்ணீர் அளவைவிட, மிக குறைவாகவே தண்ணீர் வருகிறது.இந்த குறைகளை ஆய்வு செய்து, குறிப்பிடப்பட்ட அனைத்து நீர் நிலைகளுக்கும் தண்ணீர் வருவதற்கு உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்.ஒரு ஆண்டில் குறைவான நாட்களே தண்ணீர் வருவதால், மற்ற நாட்களில் பராமரிப்பு பணி செய்ய வேண்டும். எங்கு குறைபாடு உள்ளதோ, அங்கு கவனம் செலுத்தி குழாய்களை ஆய்வு செய்து தண்ணீர் நிர்ணயிக்கப்பட்ட அளவு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.கோவை மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் நிலையான சர்க்கார் சாமகுளத்தில் உள்ள காளிங்கராயன் குளத்திற்கு அனுமதிக்கப்பட்ட தண்ணீர் அளவில் இரண்டு சதவீதம் கூட இதுவரை வரவில்லை.பல இடங்களில் தண்ணீர் சொட்டு சொட்டாக வருவதையும் தண்ணீர் வந்ததாக கணக்கில் எடுத்துக் கொள்கின்றனர்.இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை