உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஜிம்னாஸ்டிக்கில் தங்கமல்ல... 8ம் இடம்!

ஜிம்னாஸ்டிக்கில் தங்கமல்ல... 8ம் இடம்!

கோவை: தமிழ்நாடு ஜிம்னாஸ்டிக் சங்கம் சார்பில், மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் ஏரோபிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி, சென்னையில் நடந்தது. கல்லுாரி மாணவருக்கான சீனியர் பிரிவில், கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி மாணவர் மோனிஷ், தனிநபர் மற்றும் கலப்பு பிரிவுகளில் இரட்டை தங்கம் வென்றதாகவும், காஷ்மீரில் நடந்த ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டியிலும் இம்மாணவர் தங்கம் வென்றதாகவும், கல்லுாரி நிர்வாகம் தெரிவித்திருந்த செய்தி நமது நாளிதழில் நேற்று வெளியானது. ஆனால், கடந்தாண்டு காஷ்மீரில் நடந்த ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அந்த மாணவர் எட்டாம் இடம் பெற்றிருந்தார். மாநில போட்டியில் தங்கம் பெற்றதை குறிப்பிட்ட போது காஷ்மீரிலும் தங்கம் வென்றதாக தவறாக குறிப்பிட்டு விட்டோம் என, கல்லுாரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ