உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / படிப்பில் மட்டுமல்ல... ஜூடோவிலும் மாநகராட்சி பள்ளி மாணவியர் அபாரம்

படிப்பில் மட்டுமல்ல... ஜூடோவிலும் மாநகராட்சி பள்ளி மாணவியர் அபாரம்

கோவை; பள்ளி மாணவ, மாணவியருக்கு கோவை வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள், இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில் நேற்று துவங்கியது. ஜூடோ, சிலம்பம், ரோடு சைக்கிளிங், வலைபந்து உள்ளிட்ட போட்டிகள், 16ம் தேதி வரை இரு பாலருக்கும் நடக்கின்றன. நேற்று துவங்கிய மாணவியருக்கான ஜூடோ போட்டியில், 270 பேர் பங்கேற்றனர். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன், போட்டியை துவக்கி வைத்தார். 19 வயதுக்கு உட்பட்ட மாணவியர் பிரிவில் (36 கிலோ எடைக்கும் கீழ்), ஒப்பணக்கார வீதி மாநகராட்சி பெண்கள் பள்ளி மாணவி ரெயிஷா பெனுன், மகாஜனா பள்ளி மாணவி தமனா ஆகியோர் முதல் இரண்டு இடங்களை பிடித்தனர். அதேபோல், 40 கிலோவுக்கும் குறைவான எடை பிரிவில், ஒப்பணக்கார வீதி மாநகராட்சி பள்ளி மாணவி ஸ்வேதா, அவினாசிலிங்கம் பள்ளி மாணவி முத்தீஸ்வரி, ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பெண்கள் பள்ளி மாணவி சிவானி ஆகியோர், முதல் மூன்று இடங்களை பிடித்தனர். தொடர்ந்து, 44 கிலோவுக்கும் குறைவான எடை பிரிவில், ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பள்ளியின் தர்சனா, குளோபல் பாத்வேஸ் பள்ளியின் சுபஸ்ரீ, ஒப்பணக்கார வீதி மாநகராட்சி பெண்கள் பள்ளியின் நேத்ரா, புனித மேரிஸ் பெண்கள் பள்ளியின் கெரன்சா பிளசி ஆகியோர், முதல் நான்கு இடங்களை வென்றனர். 17 வயதுக்கு உட்பட்ட மாணவியர் பிரிவில் (36 கிலோவுக்கும் கீழ்), ஒப்பணக்கார வீதி மாநகராட்சி பள்ளியின் கவிஸ்ரீ, செயின்ட் மேரிஸ் பள்ளியின் சப்னா, ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பள்ளி மாணவி ரிதன்யா ஆகியோர், முதல் மூன்று இடங்களை பிடித்தனர். பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் பள்ளியின் ஹாசிகா, ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பள்ளியின் வர்ஷினி, நேரு வித்யாலயாவின் நவ்யா ஸ்ரீ, ஒப்பணக்கார வீதி மாநகராட்சி பள்ளியின் ஜிக்ரா நாஸ் ஆகியோர், 40 கிலோ எடைக்கும் கீழ் பிரிவில், முதல் நான்கு இடங்களை பெற்றனர். ஒப்பணக்கார வீதி மாநகராட்சி பள்ளியின் ஹரிவர்ஷா, ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பள்ளியின் நேன்சி, விக்டரி வித்யாலயாவின் நிகீஷா ஆகியோர், 44 கிலோவுக்கு குறைவான எடை பிரிவில், முதல் மூன்று இடங்களை வென்றனர். தொடர்ந்து, போட்டிகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை