உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஊட்டச்சத்து தோட்டதொகுப்பு செடிகள்

ஊட்டச்சத்து தோட்டதொகுப்பு செடிகள்

சூலுார்; சுல்தான்பேட்டை வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ரமேஷ் அறிக்கை:தோட்டக்கலைத்துறை சார்பில், மண் உயிர் காப்போம் காப்போம் திட்டத்தின் கீழ், ஊட்டச்சத்து மிக்க தோட்ட தொகுப்பு செடிகள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.அந்த தொகுப்பில், தலா ஒரு பப்பாளி, முருங்கை, கறிவேப்பிலை, வாழைக்கன்று இருக்கும். தொகுப்பின் மொத்த விலை, 60 ரூபாய். மானியம், 45 ரூபாய் போக, 15 ரூபாய் செலுத்தி செடிகளை பெற்றுக்கொள்ளலாம். ஆதார் கார்டு நகல், புகைப்படம் ஒன்றுடன், சுல்தான்பேட்டை வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ