மேலும் செய்திகள்
வைகை அணையில் வண்டல், களிமண் அள்ள அரசு அனுமதி
23-May-2026
வால்பாறை: வால்பாறையில், 200க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் உள்ளன. பெரும்பாலான தங்கும் விடுதிகள் முறையாக அனுமதி பெறாமல் உள்ளன. இந்நிலையில், கேரள மாநில எல்லையில் உள்ள சோலையாறு அணை பகுதியில், அரசு புறம்போக்கு இடத்தில் அனுமதியின்றி, 57 தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. இங்கு செயல்படும் தங்கும் விடுதிகளுக்கு முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளதா என விளக்கம் கேட்டு, விடுதி உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தாசில்தார் அருள்முருகன் கூறியதாவது: பொள்ளாச்சி சப்-கலெக்டர் உத்தரவின் பேரில், சோலையாறு அணை பகுதியில், வருவாய்த்துறைக்கு சொந்தமான இடங்களில், 50 தங்கும் விடுதிகளும், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் ஏழு தங்கும் விடுதிகளும் செயல்படுகின்றன. குறிப்பாக வீடு கட்ட வழங்கப்பட்ட இடத்தில், விதிமுறை மீறி ஆக்கிரமிப்பு செய்து தங்கும்விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. இதற்கு முறையான ஆவணங்கள் உள்ளதா என கண்டறியும் வகையில் ஆய்வு நடத்தப்படுகிறது. நோட்டீஸ் பெறப்பட்ட, 15 நாட்களுக்குள் தாசில்தார் அலுவலகத்தில் உரிய ஆவணங்களை சம்பந்தப்பட்டவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு, கூறினார்.
23-May-2026