உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அத்தப்பூ கோலமிட்டு ஓணம் கொண்டாட்டம் 

அத்தப்பூ கோலமிட்டு ஓணம் கொண்டாட்டம் 

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதியில் வாழும் கேரள மக்கள், ஓணம் பண்டிகைக்கு அத்தப்பூ கோலமிட்டு, நண்பர்கள், உறவினர்களுக்கு அடப்பிரதம் பாயாசம் பரிமாறி கோலாகலமாக கொண்டாடினர். பொள்ளாச்சி வாழ் கேரளா மக்கள், ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையை விமரிசையாக கொண்டாடுகின்றனர். இந்தாண்டும், ஓணம் பண்டிகையை கொண்டாட மார்க்கெட்டில் பூக்கள் மற்றும் பழங்களை நேற்றுமுன்தினம் வாங்கிச் சென்றனர். ஓணம் பண்டிகையையொட்டி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால், பொள்ளாச்சியில் வாழும் கேரளா மக்கள் குடும்பத்துடன் ஓணத்தை கொண்டாடினர். வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு, புத்தாடை அணிந்து பண்டிகையை கொண்டாடினர். அடப்பிரதம் பாயாசம் தயாரித்து, உறவினர்கள், நண்பர்களுக்கு பரிமாறி கோலாகலமாக கொண்டாடினர். ஓணம் சிறப்பு வழிபாட்டில் வீடுகளில், மாவேலி சிலை வடிவமைத்து, மலர்களால் அலங்காரம் செய்து, படையல் வைத்தும் வழிபட்டனர். * ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில், ஓணம் பண்டிகையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஒன்பது வகை அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, ஒன்பது வகை மலர்களால் அலங்கார வழிபாடு நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ