கோவையில் நடந்த ஓணம் சமத்துவ விழா
கோவை: கோவை மலையாள பண்பாட்டு மேடை சார்பில், ஓணம் சமத்துவ விழா, எஸ்.என்.ஆர்., அரங்கில் நடந்தது. கேரள முன்னாள் கல்வி அமைச்சர் ரவீந்திரநாத் துவக்கி வைத்தார். தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். பொது செயலாளர் சந்தோஷ் கூறுகையில், ''பிரிந்திருக்கும் கேரள மக்களை ஒன்று சேர்ப்பதே இவ்விழாவின் நோக்கம்,'' என்றார். முன்னாள் எம்.பி.நடராஜன் கூறுகையில், ''மதம், இனம் கடந்து அனைத்து மக்களையும் இணைக்கக்கூடியது ஓணம் பண்டிகை. கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்கு, இங்குள்ள கேரள மக்கள் சிறந்த பங்களிப்பை செலுத்தி வருகின்றனர்,'' என்றார். நடிகை ரோகிணி, கோவை ஆரிய வைத்திய பார்மஸி மேலாண் இயக்குனர் தேவிதாஸ் வாரியர், கோவை மலையாளி சமாஜம் தலைவர் ராமச்சந்திரன், உலக மலையாளி கவுன்சில் தலைவர் பத்மகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.