உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ஆவின் ஒரு லிட்டர் பாக்கெட் நிறுத்தம்

 ஆவின் ஒரு லிட்டர் பாக்கெட் நிறுத்தம்

கோவை: பால் கொள்முதல் குறைந்ததால் 4.5 சதவீத கொழுப்பு சத்துள்ள, 450 மி.லி., 'கிரீன் மேஜிக்' 6 சதவீத கொழுப்பு சத்துள்ள ஒரு லிட்டர் ஆரஞ்சு பாக்கெட் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. 500 மி.லி., ஆரஞ்சு பாக்கெட் விற்பனை தொடர்கிறது. தனியார் பால் விலை உயர்வால் ஆவின் பாலுக்கான தேவை அதிகரித்துள்ளது. ஆவினுக்கு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து மட்டுமின்றி கர்நாடகாவில் இருந்தும் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது கர்நாடகாவில் இருந்து கொள்முதல் குறைந்துள்ளதாக, ஆவின் அதிகாரிகள் கூறுகின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9efs1vff&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மேலும் அவர்கள், 'கிரீன் மேஜிக் 450 மி.லி., பால் தினசரி 1,000 முதல் 1,500 லிட்டர் விற்பனையாகிறது. விற்பனை குறைந்த தால் அந்த பாக்கெட் நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் ஆரஞ்சு பாக்கெட்டுக்கு பதில், அதே அளவு 500 மி.லி., பாக்கெட்டுகளில் விற்பனையாகிறது. தயாரிப்பு நேரத்தை குறைக்க இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Sugir Raj
அக் 01, 2026 08:27

பால் கொள்முதல் உயரவில்லை.பால் கொள்முதல் பணம் விவசாயிகளுக்கு போகவில்லை.அரசு அரசாணையில் க்ராண்ட் மானியம் என்று கூறி விட்டு கடனாக கொடுப்பதாக கூறப்படுகிறது. த.வெ.க அரசு முழுவதும் தனியார் பால் விற்பனையை ஊக்குவிப்பு.மேலும் மாவட்டங்களில் கலெக்டர் தான் தலைவர்.இவர்கள் என்ன செய்கிறார்கள்? பால் வள மேம்பாட்டு துறை அதிகாரிகள் வழக்கம் போல தனியாரிடம் பணத்தை பெற்று கொண்டு


புதிய வீடியோ