உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ஒரு மதிப்பெண் வினாக்கள் கடினம்

 ஒரு மதிப்பெண் வினாக்கள் கடினம்

கோவை: கோவையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. 130 மையங்களில் 365 பள்ளிகளைச் சேர்ந்த 35,712 மாணவர்கள் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. 35,257 மாணவர்கள் எழுதினர். பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அரசூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழாசிரியை இசக்கிசெல்வி கூறுகையில், ''பெரும்பாலான வினாக்கள் எளிதாக இருந்ததால், மாணவர்கள் தேர்ச்சி பெறுவது எளிது. 'புக் பேக்' வினாக்களின்றி, பாடங்கள் உள்ளிருந்தும் புதிய வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. ஒரு மதிப்பெண் மற்றும் இரண்டு மதிப்பெண் பகுதியில் பாடங்களிலிருந்து கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்தது. பாடங்களை முழுமையாக படித்த மாணவர்கள் நுாறு மதிப்பெண் எடுக்க வாய்ப்புள்ளது,'' என்றார். காலாண்டு, அரையாண்டு உள்ளிட்ட தேர்வுகளைப்போல, தமிழ் தேர்வுத்தாள் எளிதாக இல்லை. இதுவரை கேட்காத பாடங்களில் எடுக்கப்பட்ட புதிய கேள்விகள் கடினமாக இருந்தன. - நித்ரா. முந்தைய வினாத்தாளைக் கொண்டு கேள்வித்தாள் தயார்செய்திருந்தது மிகவும் உதவியாக இருந்தது. ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது நன்கு கவனித்ததால் அனைத்து கேள்விகளையும் எழுத முடிந்தது. - ஆர்த்தி. காலாண்டு, அரையாண்டு உள்ளிட்ட தேர்வுகளைப்போல, தமிழ் தேர்வுத்தாள் எளிதாக இல்லை. இதுவரை கேட்காத பாடங்களில் எடுக்கப்பட்ட புதிய கேள்விகள் கடினமாக இருந்தன. - நித்ரா. 'புக் பேக்' வினாக்களைத்தான் அதிகம் பயிற்சி செய்வோம். முக்கியம் இல்லை என நினைத்த செய்யுள், துணைப்பாட கதை ஆசிரியர்கள் பெயர்களுக்கு பதிலளிக்க முடியவில்லை. சிரமமாக இருந்தது. - காவிய ஸ்ரீ. ஒரு மதிப்பெண் வினாக்கள் கடினமாக இருந்தன. மற்றபடி, அனைத்து பகுதி வினாக்களும் எளிதாக இருந்தன. ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு முழுமையாக பதில் அளிக்க முடியாததால், நுாறு மதிப்பெண் எடுக்க முடியாது. - தீப்ஷிகா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை