உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / துணை ஜனாதிபதி பாதையில் நுழைந்த இருவரில் ஒருவர் கைது

துணை ஜனாதிபதி பாதையில் நுழைந்த இருவரில் ஒருவர் கைது

கோவை: துணை ஜனாதிபதி வருவதற்கு முன், போலீஸ் தடுப்பை மீறி பைக்கில் தடை செய்யப்பட்ட பகுதியில் நுழைந்த இருவரில் ஒருவரை கைது செய்த போலீசார், மற்றொருவரை தேடி வருகின்றனர். வாகனத்தின் பதிவு எண்ணை கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில், அவ்வாகனம் புலியகுளம் ஏரிமேட்டை சேர்நத ஒருவருடையது என தெரிந்தது. வாகனத்தை குனியமுத்துாரை சேர்ந்த ஒருவரிடம் அடமானம் வைத்ததாக தெரிவித்தார். அடமானம் பெற்றவரிடம் நடந்த விசாரணையில், கரும்புக்கடை ஆசாத் நகரை சேர்ந்த ஆஷிக், 24, என்பவர் வாகனத்தை ஓட்டி வந்ததும், அதேபகுதியை சேர்ந்த அனீஷ் ரகுமான், 25 பின்னால் அமர்ந்து வந்ததும் தெரிந்தது. இருவரும் மதுபோதையில் இருந்துள்ளனர். அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும், போலீசாரின் எச்சரிக்கையை மீறி பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக, இருவர் மீதும் வழக்கு பதிந்த போலீசார், ஆஷிக்கை கைது செய்தனர். தலைமறைவான அனீஷ் ரகுமானை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை