உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒருவர் மற்றொருவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்: சீமான் - விஜயலட்சுமி வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு

ஒருவர் மற்றொருவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்: சீமான் - விஜயலட்சுமி வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'சீமான் மற்றும் விஜயலட்சுமி பரஸ்பரம் வழக்குகளை வாபஸ் பெறுவதுடன் மன்னிப்பு கேட்க வேண்டும்' என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=b1ldo9jm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0'பிரண்ட்ஸ்' உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்த நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை புகார் தெரிவித்து இருந்தார். இது தொடர்பான வழக்குகளை ரத்து செய்யக்கோரி, சீமான் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த உச்ச நீதிமன்றம், 'விஜயலட்சுமியிடம் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும். கூடவே, அது தொடர்பாக பிரமாண பத்திரத்தையும் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டது. இதற்கிடையே, இந்த வழக்கின் விசாரணை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர்.மகாதேவன் அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜயலட்சுமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ''சீமான் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் மன்னிப்பு கேட்கவில்லை. மாறாக, விஜயலட்சுமிக்கு எதிரான அவதுாறை அதிகப்படுத்தி, அதை வெளிப்படுத்தி இருக்கிறார். உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், பத்திரிகையாளர்களிடம் விஜயலட்சுமி குறித்து அவதுாறு கருத்துகளை பேசி வருகிறார்,'' என்றார். அப்போது குறுக்கிட்ட சீமான் தரப்பு மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர் நாராயணன், ''கடந்த 2011ல், விஜயலட்சுமி தனக்கு எதிரான அனைத்து புகார்களையும், குற்றச்சாட்டுகளையும் வாபஸ் வாங்கிக் கொண்டார். அதன்பின், 11 ஆண்டுகள் கழித்து கடந்த 2023ல் மீண்டும் அதே புகாரை தெரிவித்திருக்கிறார்,'' என்றார். அப்போது பேசிய நீதிபதிகள், 'இந்த இடைப்பட்ட காலத்தில் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?' என விஜயலட்சுமி தரப்பிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு, சீமான் மற்றும் அவரது கட்சித் தொண்டர்களால் கடுமையான அச்சுறுத்தலுக்கு விஜயலட்சுமி ஆளானதாகவும், அதனால் மீண்டும் பெங்களூருக்கு அவர் சென்று விட்டதாகவும், சீமானால் விஜயலட்சுமியின் சினிமா வாழ்க்கை சீரழிந்ததுடன், பொது வெளியிலும் அவருடைய பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் விஜயலட்சுமி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். அதன் பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ''இருவரும் பரஸ்பரம் கொடுத்துள்ள புகார்களை திரும்ப பெறுவதுடன், ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்டு, இந்த பிரச்னையை இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்,'' என, குறிப்பிட்டனர். இதை, சீமான் தரப்பு ஏற்றுக் கொண்டது. ஆனால், விஜயலட்சுமி தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. ''விஜயலட்சுமிக்கு எதிராக சீமான் எந்த வழக்கையும் தாக்கல் செய்யாத நிலையில், சீமானிடம் விஜயலட்சுமி எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்? அதற்கான அவசியம் இல்லை,'' என விஜயலட்சுமி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதை கேட்டு கோபம் அடைந்த நீதிபதிகள், 'இந்த விவகாரத்தில், இரு தரப்பும் வழக்குகளை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும். ஒருவர் மற்றொருவரிடம் மன்னிப்பு கேட்டு, அது தொடர்பான விபரங்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்,'' என தெரிவித்தனர். அப்போது நீதிபதிகளிடம் விஜயலட்சுமி தரப்பு வழக்கறிஞர், ''சீமான் மட்டுமல்லாமல், அவரது கட்சிக்காரர்களும் விஜயலட்சுமியை பொது வெளியில் அவமரியாதையாக பேசுகின்றனர்,'' என தெரிவித்தார். இதையடுத்து, ''இந்த விவகாரம் தொடர்பாக, இரு தரப்பும் இனி ஊடகங்களிடமும், சமூக வலைதளங்களிலும் பேசக்கூடாது; மீறி பேசினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். - டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Padmasridharan
செப் 26, 2025 19:19

தைர்யம் கோழைத்தனமாகவும் கோழைத்தனம் தைரியமாகவும் மாற பல வருடங்கள் ஆகலாம். Its all about Maturity ஒருவனுக்கு ஒருத்தி, திருமணம் பின்பு தான் காமம் என்ற நிலை இந்நாட்டில் மாறிவிட்டது தற்பொழுது, சுதந்திரமென்று நினைத்து பெற்றோர்கள் அறியாமல் வெளி நபர்கள் சொல்வதை நம்பி ஆசைக்காக என்னென்னவோ திருமணம் முன்பே செய்து விடுகின்றனர். ஏமாந்த பின்பு நிறைய மக்கள் குழப்பத்தில், கோபத்தில் எடுக்கின்ற முடிவுகள் தைர்யமென்று கோழைத்தனமாக சில முடிவுகளை எடுக்கின்றனர். பின்பு வருந்துகின்றனர். புரிந்து கொண்டு சேர்ந்து வாழ என்ன வழி என்பதை யோசிக்காமல் பொய்கள் சொல்லி விலக்கி விடுவதே நிறைய நடக்கின்றது.


VSMani
செப் 26, 2025 10:54

திருமணம் செய்வதாக கூறி நல்லா விஜயலட்சுமியை ஏமாற்றிவிட்டு சாரி மன்னிச்சுக்கோ என்று சொன்னால் போதுமா?


Mecca Shivan
செப் 25, 2025 19:45

இதைவிட முக்கியமான வழக்குகள் தேங்கிய நிலையில் உள்ளதை மறந்து விட்டனரோ


SUBRAMANIAN P
செப் 25, 2025 14:14

இது என்ன....? உச்சா நீதிமன்றம் இப்படி இறங்கிட்டுது...? மன்னிப்பு கேட்டபோதுமாமே? இது நல்ல திட்டமால்ல இருக்கு.. த்ராவிடமாடல் கட்சி ஆளுங்க எல்லாரும் முதல் வரிசையில நில்லுங்கப்பா.. ஒவ்வொருத்தரா செய்த ஊழல், கொலை, எல்லா தப்புக்கும் மன்னிப்பு கேட்டுகிட்டு போய்கிட்டே இரு.. திரும்பவும் தப்பு பண்ணா உடனே வராத.. ஒரு லம்பா சேர்ந்த பிறகு மொத்தமா மன்னிப்பு கேட்டுக்கோ.. அடுத்து அதிமுகாக்கா ஆளுங்க ல்லாம் வாப்பா... மெஜாரிட்டிக்கு தான் முதல் வாய்ப்பு.. நல்ல திட்டம்.. சீக்கிரம் தேங்கி இருக்கும் வழக்குகளை இப்படி முடித்துவிடலாம்.. வாழ்க இந்தியர்... ஜனநாயகம்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 25, 2025 13:53

இந்த இரண்டு பேரும் நீதிபதிகளையே வெகுவாக குழப்ப்பி விட்டார்கள்.


viki raman
செப் 25, 2025 12:06

நாளை சீமான் ஏதேனும் பதவிக்கி வந்து ஏதாவது தவறு நிகழத்தால், இவர் மக்களிடம் மன்னிப்பு கேட்பார், மக்களும் இவரை தேர்வு செய்ததற்காக மன்னிப்பு கேட்கவேண்டும், இதுதான் ஜனநாயகம்.


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 25, 2025 11:57

கருணாநிதி, எதிர்கட்சி தலைவர்களை, மத தலைவர்களை எப்படி நாகரிகமாக, அன்போடு, பாசத்தோடு அழைத்தார்ன்னு ?


Bharathi
செப் 25, 2025 11:39

Please sanction the same justice in all pending cases and close them


மொட்டை தாசன்...
செப் 25, 2025 10:49

ஆக குற்றம் செய்துவிட்டு மன்னிப்பு கோரிவிட்டால் அதுதான் தண்டனையா சாமி


Barakat Ali
செப் 25, 2025 11:50

ஆம்... ஒரு அரசியல்வியாதியாக இருந்தால் விதிவிலக்கு உண்டு ......


Madras Madra
செப் 25, 2025 10:36

மன்னிப்பு என்பது எந்த சட்ட பிரிவின் படி? இது என்ன தீர்ப்பு? கிராம பஞ்சாயத்து தீர்ப்பு மாதிரி உள்ளது


புதிய வீடியோ