ஆன்லைன் மோசடி; வாலிபர் கைது
கோவை; கோவை, சிங்காநல்லுார் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தனது மொபைலில் சமூக வலைதளங்களை பார்த்துக்கொண்டிருந்தார். அதில் பேசிய நபர், ஆன்லைன் வாயிலாக அதிகள் சம்பாதிக்கலாம் என்றார்.இதை நம்பிய அவர், ரூ. 4.19 லட்சம் பணத்தை பல்வேறு வங்கி கணக்குகளுக்கு அனுப்பினார். ஆனால், மோசடி நபர் கூறியபடி முதலீட்டு பணத்திற்கான லாபத்தை கொடுக்கவில்லை.இது குறித்து போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், மோசடியில் ஈடுபட்டது ஈரோடு மாவட்டம், அந்தியூரை சேர்ந்த பிரதீவ், 26 என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 2 மொபைல்கள், 2 சிம் கார்டுகள், 1 வங்கி கணக்கு புத்தகம், 3 டெபிட் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.