உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஊட்டி கிழங்குகள் விலை மீண்டும் உயர துவங்கியது

ஊட்டி கிழங்குகள் விலை மீண்டும் உயர துவங்கியது

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில், ஊட்டி உருளைக்கிழங்குகள், 15 நாட்களுக்கு பின் விலை உயர்ந்து, மூட்டை ஒன்று, ரூ.2,140க்கு விற்பனை ஆனது. மேட்டுப்பாளையம் நெல்லித்துறை சாலையில், நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கம் செயல்படுகிறது. இங்கு, நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் விளைவிக்கப்படும் உருளைக்கிழங்குகள் ஏலம் விடப்படுகின்றன. கடந்த 15 நாட்களாக அதிகபட்சமாக 45 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை, ரூ.1,600 முதல் ரூ.1,900 வரை விற்பனை ஆனது. நேற்று அதிகபட்சமாக ரூ.2,140க்கு விற்பனையானது. நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சில வாரங்களுக்கு முன் மூட்டை ஒன்று அதிகபட்சமாக ரூ.2,990 வரை விற்பனையானது. அப்போது லோடு 650 மூட்டைகள் மட்டுமே வந்தன. பின், தினமும் 1,500 முதல் 3,000 லோடுகள் வந்தன. இதனால் விலை ரூ.2,000த்துக்கு கீழ் சென்றது. தற்போது வரத்து குறைந்துள்ளதால், விலை உயர துவங்கியுள் ளது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ