உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விற்பனை கூடத்தில் புதிய கிடங்கு திறப்பு

விற்பனை கூடத்தில் புதிய கிடங்கு திறப்பு

நெகமம்; நெகமம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், விவசாயிகள் விளைபொருட்களை இருப்பு வைத்து தேவைக்கு ஏற்ப விற்பனை செய்கின்றனர்.தற்போது, நெகமம் விற்பனை கூடத்தில் புதிதாக, 2 கோடி ரூபாய் மதிப்பிலான, ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதிய கிடங்கு கட்டப்பட்டுள்ளது. இதை நேற்று, தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில், நெகமம் விற்பனை கூட கண்காணிப்பாளர் ஜெயராமகிருஷ்ணன், கிணத்துக்கடவு விற்பனை கூட கண்காணிப்பாளர் செல்வராஜ், அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ