உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஊர்ப்புற நுாலகத்தின் கூடுதல் கட்டடம் திறப்பு

ஊர்ப்புற நுாலகத்தின் கூடுதல் கட்டடம் திறப்பு

அன்னூர்; கோவை மாவட்டம் அன்னுார் அருகே, நல்லி செட்டிபாளையம் ஊர்ப்புற நூலக கூடுதல் கட்டட திறப்பு விழா நடந்தது. நல்லிசெட்டிபாளையத்தில், 25 ஆண்டுகளாக ஊர்ப்புற நூலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. நூலக கட்டடம் மிகவும் சிறியதாக உள்ளதால் கூடுதல் கட்டடம் கட்ட வாசகர்கள் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து மத்திய அரசு நிதியில் இருந்து 22 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. கூடுதல் கட்டடம் கட்டப்பட்டது. இக்கட்டிடத்தை துணை முதல்வர் உதயநிதி காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் சேதுபதி, ராஜேந்திரன், ஆறுச்சாமி, வாசகர் வட்ட தலைவர் சண்முகம், நூலகர் ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர். கூடுதல் கட்டிடம் திறக்கப்பட்டதால் வாசகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !