உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநகராட்சியுடன் இணைக்க மூன்று ஊராட்சிகளில் எதிர்ப்பு

மாநகராட்சியுடன் இணைக்க மூன்று ஊராட்சிகளில் எதிர்ப்பு

சூலுார்; கோவை மாநகராட்சியுடன் பட்டணம் ஊராட்சியை இணைக்க வேண்டும், எனக்கோரி, கிராம சபை கூட்டத்தில் மக்கள் மனுக்கள் அளித்தனர். மயிலம்பட்டி, சின்னியம்பாளையம், நீலம்பூர் ஊராட்சிகளில் மாநகராட்சியுடன் இணைக்கூடாது, என, மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.குடியரசு தினத்தை ஒட்டி, சூலுார் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. பட்டணம் ஊராட்சியில் நடந்த கூட்டத்தில், பட்டணத்தை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். மாநகராட்சியுடன் இணைத்தால் தான் குடிநீர்,ரோடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்கும், எனப்பேசிய மக்கள், மனுக்களை கொடுத்து தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தினர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், கூட்டத்தில் வாக்குவாதம் நடந்தது. பெரும்பான்மையான மக்களின் கருத்தை தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும், என, கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளவில்லை, என, மக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.மயிலம்பட்டி ஊராட்சியில் மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பேட்ஜ் அணிந்து பங்கேற்ற மக்கள் கோஷமிட்டனர். இதேபோல், நீலம்பூர், சின்னியம்பாளையம் ஊராட்சியிலும் மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை