உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் தொகை தர உத்தரவு

கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் தொகை தர உத்தரவு

கோவை : கொரோனா சிகிச்சை பெற்றதற்கு, கூடுதல் தொகை வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது. கோவை, குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த நடராஜ்,60, என்பவர், 2020 ல், கொரோனா பாதிப்பு காரணமாக, சுந்தராபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். நியூ இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மருத்துவ காப்பீடு செய்து இருந்ததால், மருத்துவ சிகிச்சை செலவு தொகை, 2.87 லட்சம் ரூபாய் வழங்க கோரி விண்ணப்பித்தார். ஆனால், இன்சூரன்ஸ் நிறுவனம், 1.25 லட்சம் ரூபாய் மட்டும் வழங்கியது.இதனால், மீதி தொகை மற்றும் இழப்பீடு கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் 'மனுதாரருக்கு வழங்கப்பட வேண்டிய பாக்கி தொகையில், 77,000 ரூபாய் திருப்பி தருவேதாடு, இழப்பீடாக, 7,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை