உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பழுதான இயர்பட்ஸ் க்கு இழப்பீடு வழங்க உத்தரவு

 பழுதான இயர்பட்ஸ் க்கு இழப்பீடு வழங்க உத்தரவு

கோவை: ஆன்லைன் வாயிலாக வாங்கிய இயர்பட்ஸில், சேவை குறைபாடு இருந்தது. திருப்பியளித்தும், பணம் தராமல் இழுத்தடிப்பதாக கூறி வழக்கு தொடுத்தவருக்கு, இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கணுவாய் - சோமையம்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்தி. இவர், பெங்களூருவில் உள்ள அமேசான் டெவலப்மென்ட் சென்டரில் ஆன்லைன் வாயிலாக 2024 ஜூன் 1ல், சோனி நிறுவனத்தை சேர்ந்த 'இயர்பட்ஸ்', ரூ.9,487க்கு ஆர்டர் செய்தார். இது, பெங்களூருவில் உள்ள, அப்பாரியோ ரீட்டெய்ல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் வாயிலாக ஜூன் 4ம் தேதி டெலிவரி செய்யப்பட்டது. ஆனால், வலதுபக்க இயர்பட்ஸ் கனெக்ட் ஆவதில் குறை இருந்ததால், திருப்பி அளிக்கப்பட்டது. இதற்கான தொகை, 13 வேலை நாட்களுக்குள், வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், அத்தொகை வழங்கப்படவில்லை. இ-மெயில் வாயிலாக பலமுறை கேட்டும் பதில் அளிக்கப்படவில்லை. இதனால் 2024 செப்.12ல், கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், கார்த்தி வழக்கு தொடுத்தார். விசாரித்த நீதிபதி தங்கவேல் மற்றும் உறுப்பினர் மாரிமுத்து பிறப்பித்த உத்தரவில், 'சேவை குறைபாடு உறுதியானதால், இயர்பட்ஸ் வாங்க செலுத்திய தொகை, ரூ.9,487 மற்றும் மன உளைச்சலுக்கு ரூ.5,000, வழக்கு செலவுத்தொகை ரூ.5,000 சேர்த்து, புகார்தாரருக்கு ஒருமாத காலத்திற்குள் வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில் 9 சதவீத வட்டியுடன் திருப்பி அளிக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !