மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், உடல் உறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு அரசுத்துறை அதிகாரிகள் மரியாதை செய்தனர்.பொள்ளாச்சி அருகே, வடுகபாளையத்தை சேர்ந்தவர் சந்தோஷ்,43. இவர், போட்டோ ஸ்டுடியோ நடத்தி வந்தார். உடல் நிலை பாதிப்பு காரணமாக, கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.ஆனால், சிகிச்சை பலனின்றி அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. அவரது உடல் உறுப்புகள் தானம் செய்வதாக குடும்பத்தினர் விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து, சந்தோஷின் இதயம், கல்லீரல், கண், சிறுநீரகம், நுரையீரல், கணையம் ஆகிய உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.கோவை மாவட்ட கலெக்டர் உத்தரவின் படி, சப் - கலெக்டர் (பொ) விஸ்வநாதன், சந்தோஷ் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மண்டல துணை தாசில்தார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.