மேலும் செய்திகள்
கூட்டுறவு வார விழா விளையாட்டு போட்டி
08-Nov-2025
பொள்ளாச்சி: சர்வதேச கூட்டுறவு ஆண்டு மற்றும் 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு, பொள்ளாச்சி சரகத்தில் உள்ள கூட்டுறவு துறை அலுவலர்கள், சங்க பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டி, கோவை சூலுாரில் நடந்தது. முன்னதாக, கோவை மண்டல கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் அழகிரி தலைமை வகித்தார். பொள்ளாச்சி சரக துணைப் பதிவாளர் வடிவேல் முன்னிலை வகித்தார். தொடர்ந்து, பெண்கள் பிரிவில், த்ரோபால், 100மீ., 200மீ., ஓட்டம், குண்டு எறிதல், சதுரங்கம், வளையப்பந்து, கயிறு இழுத்தல் போட்டிகள் நடந்தது. ஆண்கள் பிரிவில், 100மீ., 200மீ., ஓட்டம், குண்டு எறிதல், கிரிக்கெட், கயிறு இழுத்தல், கபடி, வாலிபால் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. முதல் மூன்று இடங்களில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
08-Nov-2025