உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நிரம்பி வழியும் தடுப்பணை; விவசாயிகள் மகிழ்ச்சி

நிரம்பி வழியும் தடுப்பணை; விவசாயிகள் மகிழ்ச்சி

மேட்டுப்பாளையம்; தடுப்பணைகளில் தண்ணீர் நிரம்பி வழிவதால், கிணறுகளில் நீரூற்று தொடர்ந்து கிடைத்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய பகுதிகளில் ஆறு மற்றும் வாய்க்கால் பாசனம் ஏதும் இல்லை. அதனால் கிணற்று தண்ணீரை நம்பி மட்டுமே, விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதியில் வாழை, கறிவேப்பிலை ஆகிய பயிர்கள், பிரதான விவசாயமாக உள்ளது. ஆயிரக்கணக்கான விவசாயிகள் விவசாயத்தை நம்பி மட்டுமே உள்ளனர். பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து காரமடை வழியாக, சிறுமுகை வரை ஏழு எருமை பள்ளம் உள்ளது. பெரியநாயக்கன்பாளையம், வீரபாண்டி பிரிவு உட்பட சுற்றுப் பகுதிகளில் பெய்யும் மழை நீர், இப்பள்ளத்தின் வழியாக சிறுமுகைக்கு செல்கிறது. காரமடையில் இருந்து சிறுமுகை வரை, இப்பள்ளத்தில் எட்டு இடங்களில், தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, ஒரு வாரம் பெய்த கனமழையால் தடுப்பணைகள் நிரம்பி வழிந்தன. அதேபோன்று பெள்ளாதி குளமும் நிரம்பி, பதினைந்து நாட்களாக தண்ணீர் வெளியேறி வந்தது. இந்த தண்ணீரும் ஏழு எருமை பள்ளத்தின் வழியாக சென்றது. தற்போது வெயில் காலம் தொடங்கிய நிலையிலும், பெள்ளாதி மொள்ளேபாளையம் தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி வழிகிறது. இதனால் தடுப்பணையை சுற்றியுள்ள விவசாய கிணறுகளில், நீரூற்று தொடர்ந்து கிடைத்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சிஅடைந்துள்ளனர். மேலும் கிணறுகளில் போதுமான தண்ணீர் இருப்பதால், பயிர்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் பாசனம் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ