மேம்பால சுரங்கத்தில் தலைக்கு மேல் ஆபத்து
கோவை: அவிநாசி ரோடு பழைய மேம்பாலத்தை தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால், முறையாக பராமரிப்பதில்லை. மேம்பாலத்தின் சுரங்கப்பாதை மோசமான நிலையில் உள்ளது. அவ்வப்போது அறுந்து தொங்கும் கேபிள்களால் மக்கள் அவதிப்படுகின்றனர். அவ்வரிசையில் சுரங்கப்பாதையில் செல்லும் ரயில்வே தண்டவாளத்துக்கு கீழ் உள்ள தகர ஷீட் உடைந்து தொங்குகிறது. இது முதல்முறை அல்ல. ஏற்கனவே பலமுறை தகரஷீட் சேதமாகியும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை. எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் தகரம் தொங்குகிறது. விபரீதம் ஏற்படும் முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.