உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  வாகனத்தில் ஒவர் லோடு

 வாகனத்தில் ஒவர் லோடு

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு ஆர்.எஸ். ரோட்டில் இரு புறங்களிலும் கடைகள் அதிகம் உள்ளது. இதனால் ரோட்டோரம் இருசக்கர வாகனங்கள் 'பார்க்கிங்' செய்யப்படுகின்றன. ஒரு சில சரக்கு வாகனங்களில் விளை பொருட்கள் மற்றும் தனியார் நிறுவனத்திற்கான உதிரி பாகங்கள் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில், டிராக்டரில் அளவுக்கு அதிகமாக கால்நடை தீவனம் ஏற்றி செல்லப்பட்டது. இதனால் மற்ற வாகனங்கள் 'ஓவர் டேக்' செய்ய முடியாமலும், எதிரே வரும் வாகனங்கள் ஓரமாக நில்லும் நிலையும் ஏற்படுகிறது. 'ஓவர் லோடு' ஏற்றி செல்வது அடிக்கடி நடக்கிறது. இதனால் மற்ற வாகன ஓட்டுநர்களுக்கு இடையூறும், விபத்து அபாயமும் அதிகரித்து வருகிறது. எனவே, வட்டரா போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !