மேலும் செய்திகள்
வருகிறது நவராத்திரி... வந்தது கொலு பொம்மை!
20-Sep-2024
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சர்வோதயா சங்கத்தில், நவராத்திரியை முன்னிட்டு, கொலு பொம்மைகள் விற்பனைக்காக வந்துள்ளன.ஹிந்துக்கள் பண்டிகையில் முக்கியத்துவமான நவராத்திரி விழா, ஒன்பது நாட்களும் விமரிசையாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. வீடுகளில் கொலு பொம்மை வைத்தும், குழந்தைகளுக்கு கடவுள் வேடமிட்டும் பண்டிகையை கொண்டாடி மகிழ்வதும் வழக்கம்.இந்தாண்டு, வரும், 3ம் தேதி முதல் நவராத்திரி விழா துவங்குகிறது. விழாவை முன்னிட்டு, கொலு பொம்கைள் விற்பனை ஜரூராக நடக்கிறது.பொள்ளாச்சி சர்வோதயா சங்கம் காதி கிராமோத்யோக் பவனில், நவராத்திரி கொலு பொம்மைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. கிளி பொம்மைகள் முதல், பெரிய பொம்மைகள் என பல ரகங்கள் புதுமையாக வந்துள்ளன.அதில், பழநிக்கு காவடி எடுத்துச் செல்லும் செட் பொம்மைகள், கிரிவலம் செல்லும் செட்கள், விஸ்வரூபம், பிரம்மோத்ஸவம், ராமர் பட்டாபிேஷகம், கிருஷ்ணர் லீலைகள், நவ நரசிம்மர், சாய்பாபா என பலவிதமான பொம்மைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. வலைகாப்பு பொம்மைகள், தலையாட்டி பொம்மைகள், பறவைகள், விலங்குகள் என பலவிதமான பொம்மைகளும் வந்துள்ளன.இவை, 30 ரூபாய் முதல், 5,000 ரூபாய் வரை சிலைகளுக்கு விலை நிர்ணயித்து உள்ளதாக சர்வோதயா சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
20-Sep-2024