உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பழனி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம்

பழனி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம்

சூலுார் : வடவள்ளி பழனி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.சுல்தான்பேட்டை அடுத்த வடவள்ளியில் பழனி ஆண்டவர் கோவில் உள்ளது. இங்கு, கற்கோவில் அமைத்தல், வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் நடந்தன. கடந்த, 31ம் தேதி காலை, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. மாலை காப்பு அணிவித்தல், முதல் கால ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன.நேற்று முன் தினம் இரண்டு கால ஹோமங்கள் நடந்தன. 108 கோ மாதா பூஜை நடந்தது. இரவு, தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்தப்பட்டது. நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு நான்காம் கால ஹோமம் முடிந்து புனித நீர் கலசங்கள் மேள, தாளத்துடன் கோவிலை வலம் வந்தன. 8:00 மணிக்கு, விமானம் மற்றும் கோபுர கலசங்களுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும், 9:15 மணிக்கு மூலவரான ஸ்ரீ பழனி ஆண்டவருக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. இதில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். திருப்பணி குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ