உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பழநிக்கு பாதயாத்திரை பாதுகாப்பு தேவை

 பழநிக்கு பாதயாத்திரை பாதுகாப்பு தேவை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி வழியாக பழநிக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்த வேண்டும். தைப்பூசத்தையொட்டி முருகப்பெருமானுக்கு, பொள்ளாச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் விரதமிருந்து, பாத யாத்திரையாக பழநிக்கு சென்று வழிபடுகின்றனர். அதேபோன்று, கேரள மாநிலத்தில் இருந்தும் அதிக பக்தர்கள் வருகின்றனர். கோவையிலிருந்து பொள்ளாச்சி வழியாக, வெயிலுக்கு முன், காலை நேரத்திலேயே பாதயாத்திரை செல்லும் பக்தர்கள், ஆங்காங்கே சிறிது நேரம் ஓய்வெடுத்து யாத்திரையை துவக்குகின்றனர். குடும்பம், குடும்பமாகவும், நண்பர்கள் கூட்டமாகவும் வருகின்றனர். இரவில் செல்லும் போது, போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாதததால், அவதிப்பட்டு வருகின்றனர்.பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஒளிப்பட்டை ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும்; பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ