சித்தாபுதுார் அய்யப்பன் கோவிலில் பள்ளிவேட்டை
கோவை; கோவை சித்தாபுதுார் அய்யப்பசுவாமி பொற்கோவிலில், 56வது ஆண்டு உற்சவ திருவிழா மற்றும் அய்யப்பசேவா சங்கத்தின், 70ம் ஆண்டு விழா, கடந்த 28ம் தேதி முதல் நடந்து வருகிறது.விழாவை முன்னிட்டு சுவாமிக்கு, பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. ஏழாம் நாளான நேற்று, 'பள்ளிவேட்டை' என்ற நிகழ்ச்சி நடந்தது. காலையில் உற்சவ பூஜைகளும், சிறப்பு பூஜைகளும், நிறைபிறை சமர்ப்பித்தலும், மாலை 6:30 மணிக்கு தீபாராதனையும் நடந்தது.அதன் பிறகு, அலங்கரிக்கப்பட்ட யானைகளுடன் செண்டை மேளம், பஞ்சவாத்தியம் முழங்க ஆவாரம்பாளையம் விநாயகர் கோவிலில் இருந்து புறப்பட்டு, பாரதியார் ரோடு, வி.கே.கே.மேனன் ரோடு சந்திப்பு வழியாக, அய்யப்ப சுவாமி கோவிலை வந்தடைந்தார்.ஏராளமான பக்தர்கள் ஊர்வலத்தில் பங்கேற்று, அய்யப்பன் அருளை பெற்றனர்.