உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சின்னவேடம்பட்டி ஏரியில் பனை விதை நடும் விழா

சின்னவேடம்பட்டி ஏரியில் பனை விதை நடும் விழா

கோவை; சங்கரா அறிவியல் வணிகவியல் கல்லுாரி, என்.எஸ்.எஸ்., சுற்றுச்சூழல் மன்றம், கவுசிகா நீர்க்கரங்கள் சார்பில், சின்னவேடம்பட்டி ஏரியில் பனை விதைகள் நடப்பட்டன. கல்லுாரி இணை செயலாளர் சந்தியா ராமச்சந்திரன், துணை இணை செயலாளர் நித்யா ராமச்சந்திரன் தலைமை வகித்தனர். கலெக்டர் பவன்குமார் பேசுகையில், ''இன்றைய இளைஞர்கள் சமுதாயத்துக்கு பயனுள்ள செயல்களில் ஈடுபடுவது வரவேற்கத்தக்கது,'' என்றார். கவுசிகா நீர்க்கரங்கள் அமைப்பின் நிர்வாக அறங்காவலர் செல்வராஜ், செயலாளர் சிவராஜா, கல்லுாரி முதல்வர் ராதிகா, துணை முதல்வர் பெர்னார்டு எட்வர்டு, பேராசிரியர்கள் மாணவ, மாணவியர் பனை விதைகளை நட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !