தேர்தல் பாதுகாப்புக்கு துணை ராணுவ படை
கோவை: தமிழக தேர்தல் பாதுகாப்பு பணிக்கு கூடுதலாக, இரண்டு துணை ராணுவ படையினர் கர்நாடகாவில் இருந்து கோவை வந்தனர். கோவை மாவட்ட அளவில் ( ரூரல் உட்பட) 3,523 ஓட்டு சாவடிகள் உள்ளன. அதில், 182 ஓட்டு சாவடிகள் பதற்றமானவையாக பட்டியலிடப்பட்டுள்ளன. தேர்தல் நாளன்று மிக பதற்றமான மற்றும் பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் துணை ராணுவத்தினரும், போலீசாரும், சாதாரண ஓட்டு சாவடிகளில் போலீசாரும், ஊர்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் இருந்தே, 2 துணை ராணுவ படையினர் கோவையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 10 ராணுவ படையினர் வந்த நிலையில், மேலும் இரண்டு துணை ராணுவ படை கர்நாடகாவில் இருந்து வந்துள்ளது.