உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பார்க்கிங் செய்த பைக் திருட்டு

பார்க்கிங் செய்த பைக் திருட்டு

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, 'பார்க்கிங்' செய்யப்பட்ட பைக் திருடு போனது. கிணத்துக்கடவு, கொண்டம்பட்டியை சேர்ந்தவர் சிவகுமார், 33, தனியார் கம்பெனியில் வேலை செய்கிறார். இவர்,இரு தினங்களுக்கு முன் கோவில்பாளையத்தில் நடக்கும் நிகழ்ச்சிக்கு தனது பைக்கில் சென்றார். அப்போது இவரது பைக்கை கிணத்துக்கடவு பழைய பஸ் ஸ்டாப் அருகே உள்ள பேங்க் அருகில் பார்க்கிங் செய்து விட்டு, தனது நண்பருடன் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். திரும்பி வந்த போது, பார்க்கிங் செய்த இடத்தில் பைக் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து அருகில் தேடினார். அதன்பின் பைக் திருடு போனதை உறுதி செய்து, கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் சி.சி.டி.வி., கேமரா பதிவு காட்சிகளை கொண்டு விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி