வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நடக்கும் சில விஷயங்களை நினைத்தால் நமது நாட்டைப்பற்றி பெருமை கொள்ள முடிவதில்லை. தலைக்குனிவுதான் ஏற்படுகிறது. நாட்டின் முன்னாள் பிரதமரைக் கொன்ற குற்றவாளிக்கு கட்டித்தழுவி வரவேற்பு, குற்றம் செய்தவர் ஜாமீனில் வெளிவந்ததும் அமைச்சர் பதவி, கள்ளச் சாராயத்துக்கு ஊக்குவிப்புத்தொகை பத்து இலட்சம், இன்னமும் பல கிராமங்களில் பட்டியலின மக்களின் இறுதி ஊர்வலத்தில் பிணம் எடுத்துச் செல்லும் பாதை குறித்து கலவரங்களும் வன்முறைகளும் நடந்துகொண்டிருக்கும் போது, தேச விரோதத் தீவிரவாதக் கும்பல் தலைவனுக்கு, அதுவும் நூறு பேரைக் கொன்றவனுக்கு அரசு காவல்துறை பாதுகாப்புடன் இறுதி ஊர்வலம், அவனுக்கு அரசியல் தலைவர்கள் இறுதி மலர் அஞ்சலி, புகழாரம். மனித நாகரீகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது? இதே அரசு கோவை செல்வபுரம் உக்கடம் பகுதியில் இறந்த இந்த கொலைகாரனுக்கு நினைவு மண்டபம் எழுப்பி ஆண்டு தோறும் அரசு முறை நினைவாஞ்சலி செலுத்தினாலும் ஆச்சரியப்பட முடியாது போல இருக்கிறது கேவலம் பதவி வெறி கொண்டு வோட்டுக்காக இப்படியெல்லாம் செய்யும் ஆட்சியாளர்கள் திருந்தவே வழியில்லையா?