மேலும் செய்திகள்
வாகனம் நிறுத்தும் இடமாக மாறிய பயணியர் நிழற்குடை
30-May-2025
வால்பாறை; வால்பாறை நகராட்சி சார்பில், மக்கள் பயன்பாட்டிற்காக எஸ்டேட் பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட பயணியர் நிழற்க்கூரை கட்டப்பட்டுள்ளன. இதில், பெரும்பாலான பயணியர் நிழற்கூரையை இரவு நேரத்தில் சமூக விரோதிகள் ஆக்கிரமித்து, மது குடிக்கும் திறந்தவெளி பாராக மாற்றி வருகின்றனர்.இதனால், பயணியர் அந்தப்பகுதியில் உள்ள நிழற்கூரையை பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். இந்நிலையில், நல்லகாத்து பிரிவில் உள்ள பயணியர் நிழற்கூரையில் பகல் நேரத்தில் பைக்குகள் நிறுத்துகின்றனர்.பொதுமக்கள் கூறுகையில், 'நகராட்சி சார்பில், பல லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணியர் நிழற்கூரை மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. நிழற்கூரையை திறந்தவெளி பாராக மாறி வருவதையும், பைக் நிறுத்தும் இடமாக மாறி வருவதையும் தடுக்க, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
30-May-2025