உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மயான சுற்றுச்சுவரில் மண் அரிப்பு: குழாய் அமைக்க மக்கள் கோரிக்கை

மயான சுற்றுச்சுவரில் மண் அரிப்பு: குழாய் அமைக்க மக்கள் கோரிக்கை

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, கொண்டம்பட்டிக்கு உட்பட்ட மயானத்தில், ஆதிதிராவிட நிதியிலிருந்து, 11.35 லட்சம் மதிப்பீட்டில், மயானத்தின் எரிமேடை, கான்கிரீட் தளம் மற்றும் சுற்று சுவர் கடந்த, 2024ல் கட்டப்பட்டது. மயானத்தின் சுற்றுச்சுவர் நீரோடை அருகாமையில் உள்ளது. தற்போது பெய்யும் பருவமழையால், இந்த சுற்றுச்சுவரின் அடிப்பகுதியில் நீரோடையை நோக்கி சென்ற மழை நீரால் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், சுவரின் அடிப்பகுதி அந்தரத்தில் தொங்குவது போன்றுள்ளது. இதை கண்ட மக்கள் அதிர்ச்சி அடைந்து ஒன்றிய அலுவலகத்தில் புகார் அளித்தனர். சுற்றுச்சுவரை பாதுகாக்க, தாழ்வான பகுதியில், தண்ணீர் வெளியேறும் வகையில் குழாய் வைக்க வேண்டும் என, வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது: கொண்டம்பட்டியில் உள்ள மயானத்தின் சுற்றுச்சுவர், அரசு அறிவித்த விதிமுறைப்படி கட்டப்பட்டுள்ளது. இந்த சுற்றுச்சுவர் கட்டப்பட்ட இடத்தின் அருகாமையில் நீரோடை இருப்பதால் மழை காலங்களில், மழை நீர் சுவர் அருகே வழிந்தோடுவதால் மண் அரிப்பு உண்டாகி, சுவருக்கும் தரைக்கும் இடைவெளி ஏற்பட்டுள்ளது. இந்த சுவர் அருகே மணல் கொட்டி சரி செய்ய அறிவுறுத்தியுள்ளோம். தொடர்ந்து மழை பெய்து வருவதால், மயான பகுதி சேறும் சகதியமாக உள்ளது. இங்கு வாகனங்கள் சென்றால் சேற்றில் சிக்க வாய்ப்புள்ளது. எனவே, விரைவில் இப்பிரச்னை சரி செய்யப்படும். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ