உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ஏ.டி.எம்., மையம் அமைக்கணும் இரு மாநில மக்கள் கோரிக்கை

 ஏ.டி.எம்., மையம் அமைக்கணும் இரு மாநில மக்கள் கோரிக்கை

வால்பாறை: சோலையாறு அணைப்பகுதியில், ஏ.டி.எம்., மையம் அமைக்க வேண்டும் என இருமாநில மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வால்பாறையில் இருந்து, 28 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது சோலையாறுடேம். இந்த பகுதியை சுற்றி முருகாளி, ேஷக்கல்முடி, புதுக்காடு, கல்யாணப்பந்தல், பன்னிமேடு, சேடல்டேம், இடதுகரை உள்ளிட்ட பகுதிகளில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் தமிழக கேரள எல்லையில் வால்பாறை அமைந்துள்ளதால், இங்குள்ள மளுக்கப்பாறை டீ எஸ்டேட் தொழிலாளர்களும், சோலையாறு அணைக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்க வந்து செல்கின்றனர். இது தவிர, கேரளாவில் இருந்து அதிரப்பள்ளி வழியாக, வால்பாறைக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாபயணியரும் வந்து செல்கின்றனர். இந்நிலையில், இருமாநிலங்களை இணைக்கும் சோலையாறு அணைப்பகுதியில் ஏ.டி.எம்., மையம் இல்லாததால், 28 கி.மீ., தொலைவில் உள்ள வால்பாறை நகருக்கு தான் மக்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. பொதுமக்கள் கூறுகையில், 'எஸ்டேட் தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாபயணியர் அதிக அளவில் வந்து செல்லும் சோலையாறு அணைப்பகுதியில், இருமாநில மக்கள் பயன்பெறும் வகையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் சார்பில் ஏ.டி.எம்., மையம் திறக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ