உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பட்டணத்தை மாநகராட்சியோடு இணையுங்கள் பேரூராட்சியாக தரம் உயர்த்த மக்கள் எதிர்ப்பு

பட்டணத்தை மாநகராட்சியோடு இணையுங்கள் பேரூராட்சியாக தரம் உயர்த்த மக்கள் எதிர்ப்பு

கோவை: பட்டணம் ஊராட்சியை, மாநகராட்சியோடு இணைக்க வேண்டும் என, பட்டணம் ஊராட்சி பொதுமக்கள் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.கோவை திருச்சி சாலையையொட்டி அமைந்துள்ளது, பட்டணம் ஊராட்சி. 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். நகருக்கு மிகவும் அருகில் இருப்பதால், இங்கு மக்கள் நெருக்கம் அதிகம். ஆனாலும் ஊராட்சியாகவே, பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.இந்நிலையில், மாநகராட்சியுடன் இணைக்கக்கோரி, கலெக்டருக்கு இப்பகுதி மக்கள் மனு அளித்துள்ளனர்.மனுவில் கூறியுள்ளதாவது:கடந்த இரண்டு நாட்களுக்கு முன், தமிழக அரசால் எங்கள் ஊராட்சி பேரூராட்சியாக அறிவிக்கப்படும்என்ற அறிவிப்பு வெளியானது. அதற்கு மாற்றாக, மாநகராட்சி உடன் இணைக்க வேண்டும்.பட்டணம் ஊராட்சியில் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. போதுமான பஸ்கள் இயக்கப்படாததால்,அன்றாட போக்குவரத்துக்கு கடும் பாதிப்பு ஏற்படுகிறது.திருச்சி சாலையிலிருந்து, பட்டணத்துக்கு செல்லும் சாலை, மிக மோசமானதாக உள்ளது. அதை செப்பனிட்டுத்தர வேண்டும்; அல்லது புதிய தார்சாலை அமைத்துக்கொடுக்க வேண்டும்.மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை, சாக்கடை கால்வாய், பொதுமக்கள் நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்யவும், மாலை நேரத்தில் வயோதிகர்கள் காற்றோட்டமாக அமருவதற்கும், பூங்கா வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும்.கோவை மாநகராட்சிக்கு அருகருகே உள்ள, ஊராட்சிகள் அனைத்தும் மாநகராட்சியோடு இணைக்கப்படும் நிலையில், பட்டணம் ஊராட்சி மட்டும் பேரூராட்சியாக மாற்றப்படுவதற்கு என்ன காரணம்? உண்மை நிலையை அதிகாரிகள் புரிந்து கொண்டு, பட்டணத்தை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும். இவ்வாறு, பொதுமக்கள் மனு சமர்ப்பித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ