உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை குற்றாலத்தில் நாளை முதல் அனுமதி

கோவை குற்றாலத்தில் நாளை முதல் அனுமதி

தொண்டாமுத்தூர்; கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில், 47 நாட்களுக்குப்பின் தடை நீக்கப்பட்டு, நாளை முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு, வனத்துறையினர் அனுமதியளித்துள்ளனர்.கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையின் காரணமாக, கடந்த மே 25ம் தேதி, கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், நீர்வீழ்ச்சியில், நீர்வரத்து சீரானதால், 47 நாட்களுக்குப்பின், சுற்றுலாப்பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு, நாளை (ஜூலை 11) முதல், சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியளித்துள்ளதாக, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !