பி.எப்., சந்தாதாரர் குறை தீர்ப்பு கூட்டம்
கோவை; கோவை மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் இணைந்து, சந்தாதாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய, அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நாளில், 'நிதி ஆப்கே நிகட்' (Nidhi Aapke Nikat) என்ற பெயரில், குறை தீர்ப்பு கூட்டங்களை நடத்தி வருகிறது.கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் வரும், 27ம் தேதி இந்த குறை தீர்ப்பு கூட்டம் நடத்தப்படுகிறது. கோவையில் மேட்டுப்பளையம் காரமடை ரோடு ஏபிடி மாருதி சுசுகி ஷோரூம் அருகில் உள்ள மெட்ரோ மெட்ரிக் பள்ளியிலும், நீலகிரி மாவட்டம் செயின்ட் மேரிஸ் கில், ஊட்டி வுட்காக் ரோட்டில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லுாரியிலும், இந்த கூட்டம் நடக்கிறது.இந்த கூட்டத்தில், வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், இ.எஸ்.ஐ.சி., உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், காலை 10:30 முதல் 12:30 மணி வரை, நேரில் முறையிடலாம்.யூஏஎன் (UAN) எண், வைப்பு நிதி கணக்கு எண் அல்லது ஓய்வூதிய நியமன ஆணை எண் அல்லது இ.எஸ்.ஐ.சி., எண் கொண்டு வருவது அவசியம்.பி.எப்., தொடர்பான குறைகளை, pghs.epfindia.gov.inஎன்ற மின்னஞ்சல் வாயிலாக பகிர்ந்து கொள்ளலாம்.இந்த தகவலை, கோவை மண்டல வைப்பு நிதி உதவி கமிஷனர் அங்குஷ் குண்டு தெரிவித்துள்ளார்.