உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  போன் திருடியவர் சிறையிலடைப்பு

 போன் திருடியவர் சிறையிலடைப்பு

கோவை: லங்கா கார்னர் பகுதியை சேர்ந்தவர் விஜயன், 47. மேட்டுப்பாளையம் ரோட்டில் பூமார்கெட்டில் பூக்கடை நடத்தி வருகிறார். இரு தினங்களுக்கு முன், இவரது கடைக்கு பூ வாங்குவது போல் ஒருவர் வந்தார். பூ விலை கேட்பது போல், விஜயனின் மொபைல்போனை திருடிக் கொண்டு தப்பினார். அருகிலிருந்தவர்கள் உதவியுடன் அவரை பிடித்த விஜயன் ஆர்.எஸ்.புரம் போலீசாரிடம் ஒப்படைத்தார். விசாரணையில் அவர் போத்தனுார் சாஹிப் வீதியைச் சேர்ந்த அப்துல் ரஷீத், 41 எனத் தெரிந்தது. போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை