உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேர்வு பணியில் சேர்க்க உடற்கல்வி ஆசிரியர்கள் முறையீடு

தேர்வு பணியில் சேர்க்க உடற்கல்வி ஆசிரியர்கள் முறையீடு

கோவை; பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பறக்கும் படை பணியில், தங்களை சேர்க்குமாறு உடற்கல்வி ஆசிரியர்கள் முறையிட்டுள்ளனர்.தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்கத்தினர், மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில், நேற்று அளித்த மனு:இந்தாண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு, தாங்கள் அனுப்பிய பறக்கும் படை பணிக்கான பெயர் பட்டியலில், உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் பெயர்கூட இல்லாதது வருத்தம் அளிக்கிறது. தேர்வு பணியில் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இயக்குனர்கள் மிக சிறப்பாக, உள் மாவட்டம் மட்டுமின்றி, வெளி மாவட்டங்களுக்கும் சென்று பணிபுரிந்து பாராட்டு பெற்றுள்ளனர். ஆனால், இந்த கல்வியாண்டில் பெயர் வராததற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. எனவே, 50:50 என்ற சதவீதம் அடிப்படையில், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இயக்குனர்களை(நிலை-2) பறக்கும் படை பணியில் நியமிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை