உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  இயற்பியல் பாடம் எளிது

 இயற்பியல் பாடம் எளிது

அன்னுார்: 'இயற்பியல் தேர்வு எளிதாக இருந்தது,' என, சி.பி.எஸ்.இ., மாணவர்கள் தெரிவித்தனர். சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு துவங்கி நடந்து வருகிறது. அன்னுார் வட்டாரத்தில், நவபாரத் நேஷனல் பள்ளியில் தேர்வு மையம் செயல்படுகிறது. நேற்று அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு, இயற்பியல் பாடத்திற்கான தேர்வு நடந்தது. அன்னூர் மையத்தில், 200க்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர்.

Galleryசர்வேஷ் கார்த்திக்: ஒரு மதிப்பெண் 16 வினாக்கள், இரண்டு மதிப்பெண்களுக்கு ஐந்து வினாக்கள், மூன்று மதிப்பெண்ணுக்கு ஏழு வினாக்கள், நான்கு மதிப்பெண்களுக்கு இரண்டு வினாக்கள், ஐந்து மதிப்பெண்களுக்கு மூன்று வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. ஐந்து மதிப்பெண் வினாக்கள் மிக எளிதாக இருந்தது; எளிதில் தேர்ச்சி பெறலாம். ரித்துவர்ஷினி: இயற்பியல் பாடத்தில், 70 மதிப்பெண்களுக்கு தேர்வு நடந்தது. ஒரு மதிப்பெண்ணில், 16 வினாக்களும், ஐந்து மதிப்பெண் வினாக்களும் எளிதாக இருந்தன. இரண்டு மதிப்பெண், மூன்று மதிப்பெண், நான்கு மதிப்பெண் வினாக்கள் சுற்றி வளைத்து கேட்கப்பட்டிருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ