குடிநீர் தொட்டியில் புறா இறப்பு
கோவை; கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள அடுக்குமாடி அரசு குடியிருப்பில் 1,848 அடுக்குமாடி வீடுகள் உள்ளன.குடியிருப்புகளுக்கான குடிநீர் வினியோகம், துாய்மைப்பணி, பழுதுகளை சரிசெய்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இச்சூழலில் பி2 பிளாக்கின் மேல்தளத்தில் உள்ள குடிநீர் தொட்டி ஒன்றில் நேற்று முன் தினம் இரவு பராமரிப்பு பணி மேற்கொள்ளும் தனியார் நிறுவன பணியாளர்கள் குடிநீர் நிரப்பியுள்ளனர். அப்போது தொட்டியின் மேல்மூடியை திறந்து வைத்துள்ளனர். அதிகாலை நேரத்தில் சென்ற புறாக்களில் ஒன்று தவறி தொட்டியினுள் விழுந்து இறந்தது. இந்த தகவல் ஒரு நாளைக்கு பின்பே அனைவருக்கும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அக்குடியிருப்பில் இருக்கும் அனைவரையும் குடிநீர் பருக வேண்டாம் என்று அரசு ஊழியர் குடியிருப்போர் சங்க நிர்வாகி சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் எச்சரித்தனர். இந்த தகவல் வீட்டு வசதி வாரிய அதிகாரிகளுக்கு தெரிவித்தும் யாரும் எந்த விசாரணையும் மேற்கொள்ளவில்லை. எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. பி2 குடியிருப்பில் வசிப்போர் கேன் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்த துவங்கியுள்ளனர்.