சோதனை சாவடிகளில் கண்காணிப்புக்கு திட்டம்
கோவை: தமிழக தேர்தல் ஆணையம் அனைத்து மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனையில் ஈடுபட்டது. அப்போது, பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகள் மற்றும் தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் ஆனைக்கட்டி, வாளையார் உள்ளிட்ட 13 முக்கிய சோதனை சாவடிகளில் சோதனையை பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடாவை தடுக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும் மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக இடுக்கி, பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம் ஆகிய கேரள மாநில மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்த, தேர்தல் பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.