மேலும் செய்திகள்
மக்களைத் தேடி மாநகராட்சி நாளை சிறப்பு முகாம்
10-Nov-2024
கோவை; கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள சாலை தீவுத்திடல்கள் மற்றும் மேம்பாலங்களுக்கு கீழுள்ள மையத்தடுப்பு பகுதிகளை மேம்படுத்தி, செடிகள் வளர்க்க, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தியுள்ளார்.கோவை மாநகராட்சி பகுதியில், சுங்கம் ரவுண்டானா, ரேஸ்கோர்ஸ், ப்ரூக் பீல்ட்ஸ் ரோடு, நஞ்சப்பா ரோடு ரவுண்டானா, வடகோவை மேம்பாலம் உட்பட 11 இடங்களில் சாலை தீவுத்திடல்கள் தனியார் மூலமாக மேம்படுத்தப்பட்டன. இவை பொதுமக்களை கவரும் வகையில் அமைந்திருப்பதால், மேலும், 15 இடங்களில் சாலை தீவுத்திடல்களை மேம்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, நெடுஞ்சாலைத்துறை வழங்கிய வரைபடத்தின் படி, வடகோவை சிந்தாமணி பகுதியில், 'ரவுண்டானா' அமைக்கும் பணியை, மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்கிறது.இதேபோல், திருச்சி ரோடு மேம்பாலம், காந்திபுரம் மேம்பாலத்துக்கு கீழ் மையத்தடுப்புகளில் செடிகள் நட்டு, பசுமை பரப்பை அதிகரிக்க, மாநகராட்சி பொறியாளர்களுக்கு கமிஷனர் சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, திருச்சி ரோட்டில் மையத்தடுப்புகளில் கொட்டப்பட்டிருந்த கட்டட கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன. பின், செம்மண் கொட்டி, சுற்றிலும் கிரில் கம்பிகள் அமைத்து, செடிகள் நட்டு வளர்ப்பதற்கான பணிகள் துவங்க உள்ளன.இதுகுறித்து, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ''அனைத்து மையத்தடுப்புகளிலும் செடிகள் வளர்த்து பசுமை பரப்பை அதிகரிக்க உள்ளோம். மேம்பாலங்களில் கீழ்ப்பகுதியில் செடிகள் நட்டு அழகுப்படுத்தப்படும். மாநகராட்சியே இப்பணியை மேற்கொள்ள இருக்கிறது; தனியார் நிறுவனத்தினர் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம்,'' என்றார்.
10-Nov-2024