உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முடுதுறை ஊராட்சியில் 1,000 பனை விதைகள் நடவு

முடுதுறை ஊராட்சியில் 1,000 பனை விதைகள் நடவு

மேட்டுப்பாளையம்; முடுதுறை ஊராட்சியில், இளைஞர்கள், 1000 பனை விதைகளை, குட்டைகள் மற்றும் நீர்நிலை பள்ளங்களில் நட்டனர். தமிழக அரசு பனை மரங்களை பாதுகாக்க வேண்டும். மரங்களை வெட்டுவது என்றால், அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டது. இதை அடுத்து காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முடுதுறை ஊராட்சியில் உள்ள இளம் புயல் நற்பணி மன்றத்தினர், குட்டைகளில் பனை விதைகளை நடும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து இளம் புயல் நற்பணி மன்றத்தினர் கூறியதாவது: முடுதுறை கிராமத்தில் ஏராளமான பனை மரங்கள் உள்ளன. மரத்திலிருந்து பனம் பழம் கீழே விழுந்து, வீணாக உள்ளது. கடந்த மூன்று நாட்களாக பனை மரங்களின் அடியில் விழுந்து கிடந்த, பனை விதைகளை இளைஞர்கள் சேகரித்தனர். 1000க்கும் மேற்பட்ட கொட்டைகளை ஊராட்சிக்கு உட்பட்ட முடுதுறை, மீனம்பாளையம், சின்னகுமாரபாளையம், பெரிய குமாரபாளையம், கலியம்பாளையம் ஆகிய ஊர்களில் உள்ள குட்டைகளிலும், தண்ணீர் ஓடும் பள்ளங்களிலும் நடவு செய்தோம். மற்ற மர நாற்றுகளை நட்டால், ஆடுகள் கடித்து சாப்பிட்டு விடும். பனைமரங்கள் பெரியதாக வளர்ந்த பிறகு, நுங்கு, பனம் பழம், பனங்கிழங்கு ஆகியவை கிடைக்கும். இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ