பிளாஸ்டிக் பயன்பாடு கடைகளுக்கு அபராதம்
அன்னூர்: அன்னூர் பேரூராட்சியில், மேட்டுப்பாளையம் சாலை மற்றும் கோவை சாலையில், 15 கடைகளில், இன்று (நவ.,24) சுகாதார அலுவலர் ராஜ்குமார் தலைமையில் சோதனை நடத்தப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது. இரண்டு கி., 100 கிராம் பிளாஸ்டிக் கவர்கள் வரிகள் செய்யப்பட்டன. 3,300 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. இரண்டாவது முறை கண்டறியப்பட்டால் அபராதம் இரட்டிப்பாகும். மூன்றாவது முறை தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். சோதனையில் மேற்பார்வையாளர் பிரதீப் குமார் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.