பிளஸ் 2 செய்முறை தேர்வு துவக்கம்
கோவை: நடப்பு கல்வியாண்டில் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் நேற்று துவங்கியது. வரும் 16ம் தேதி வரை நடக்கும். அறிவியல் பாடப்பிரிவு மாணவர்களுக்கு ஆய்வகங்களிலும், மற்ற பாடங்களுக்கு அந்தந்த பள்ளிகளிலும், வெளிப்படைத்தன்மையுடன், வெவ்வேறு பள்ளிகளை சேர்ந்த கண்காணிப்பாளர்கள் முன்னிலையில் தேர்வு நடந்தது. செய்முறைக்கு 20 மதிப்பெண்களும், அகமதிப்பீட்டிற்கு 10 மதிப்பெண்கள் என்று, 30 மதிப்பெண்கள் வழங்கப்படும். மீதமுள்ள 70 மதிப்பெண்களுக்கு எழுத்து தேர்வுக்கு நடத்தப்படும். எழுத்துத்தேர்வு மார்ச் 2 முதல், 26 வரை நடக்கிறது.